சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலி

Feb 19, 2020 05:29 PM 159

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர் அருகே சின்னக்காமன் பட்டியில் பிரபாகர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பணியில் வழக்கம் போல் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

பேன்சி ரக பட்டாசு தயார் செய்யும் போது மருந்துகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் இரண்டு அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின.

இதில், ஒரு சிறுவன் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Comment

Successfully posted