கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

Aug 13, 2019 09:35 PM 50

தெலுங்கானா மாநிலம், மெட்சலில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்

மெட்சல் மாவட்டத்தில் உள்ள சமீர் பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக வந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் நிலைகுலைந்த கார், எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீதும் மோதி விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயமடைந்த மூவரும் அருகே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted