போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது

May 13, 2019 07:09 AM 58

போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்த கியூ பிரிவு போலீசார், அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அண்மையில் கோவை, ராமநாதபுரம், திருச்சி மற்றும் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை செய்த 13 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் மேலும் 3 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சுரேந்திரன், ஹரிகரன், நிஷாத்தன் ஆகிய 3 பேரும் இலங்கை தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் 12-வது இளம் சிறார் நீதிமன்ற நடுவர் கெல்லிஸ் சண்முகப்பிரியா முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted