ஒகேனக்கல் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 3 பேர் கைது

Mar 24, 2019 09:36 AM 348

ஒகேனக்கல் வனப் பகுதியில் மான் வேட்டையாடிய 3 பேரை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்த 35 கிலோ மான் இறைச்சி மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதியில் மர்மநபர்களின் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் நாட்டு துப்பாக்கியுடன் திரிந்த மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், வனப்பகுதியில் மானை வேட்டையாடியது தெரியவந்தது.

இதனையடுத்து, மாதேஷ், காவேரியப்பன், மற்றும் குஞ்சப்பன் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள், அவர்களிடமிருந்து, 35 கிலோ மான் இறைச்சி மற்றும் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Comment

Successfully posted