திண்டிவனத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 3 பேர் கைது

May 25, 2019 08:44 AM 67

திண்டிவனத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 36 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

திண்டிவனம் மேம்பாலத்திற்கு அருகே உள்ள உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்ட மூன்று பேர், பணம் கொடுக்காமல் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், தகராறில் ஈடுபட்ட மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அந்த மூன்று பேரின் பெயர் அருணாச்சலம், பாண்டியன், வேடியப்பன் என்பதும் அவர்கள் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், 36 சவரன் திருட்டு நகைகளை மீட்டதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted