சென்னை மெரினாவில் கடலில் மூழ்கிய தனியார் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி

Dec 09, 2018 07:00 PM 266

சென்னை மெரினாவில் குளிக்க சென்ற இளைஞர்கள் மூன்று பேர் கடலில் முழ்கி பலியானார்கள்.  ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவர்கள் சிலர், விடுமுறை தினம் என்பதால் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர்.

3 நண்பர்கள் கரையிலேயே உட்கார்ந்து கொண்டிருக்க, பரத்,ஜெய் கீர்த்தி வர்மா, தினேஷ்குமார் ஆகிய மூன்று மாணவர்கள் மட்டும் கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது ராட்சத அலையில் சிக்கிய மாணவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். தண்ணீரில் தத்தளித்த அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்த தினேஷ்குமார் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
Comment

Successfully posted