மக்கள் குறைதீர் முகாம் மூலம் விழுப்புரத்தில் 8481 மனுக்களுக்கு தீர்வு : அமைச்சர் சி.வி. சண்முகம்

Nov 18, 2019 11:39 AM 80

விழுப்புரத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தின் மூலம் பெறப்பட்ட 8 ஆயிரத்து 481 மனுக்கள் மீதான பரீசலனை செய்யப்பட்டு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முதலமைச்சரின் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு முதியோர்களுக்கான ஓய்வூதியம், விதவை பெண்களுக்கான நிதியுதவி, இலவச வீட்டுமனை பட்ட உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின் விழாவில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரத்தில் பெறப்பட்ட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாகவும், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது 8 ஆயிரத்து 481 மனுக்கள் மீதான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Comment

Successfully posted