தமிழகம் முழுவதும் இன்று மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

Dec 15, 2019 06:32 AM 309

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரள எல்லையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இன்று பரவலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, நாமக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted