17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்!

Jun 01, 2020 04:08 PM 1201

தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை புயலாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லோசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

Comment

Successfully posted