வடதமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!- வானிலை ஆய்வு மையம்

Jul 01, 2020 03:17 PM 426

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகடலோர மாவட்டங்கள் மற்றும் கோவை, தருமபுரி, சேலம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 5 ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted