ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

Mar 16, 2019 07:24 AM 225

சென்னையில் வருகிற 23 ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.

பன்னிரண்டாவது ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி சென்னையில் நடக்கவுள்ள நிலையில் இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. இதற்காக ரசிகர்கள் நள்ளிரவு முதலே சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தின் முன்பு டிக்கெட்டுகளை வாங்க குவிந்துள்ளனர். ஆயிரத்து 300 ல் தொடங்கி 6 ஆயிரத்து 500 வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

Comment

Successfully posted