சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் 

Dec 08, 2019 01:29 PM 270

சென்னையில் நடைபெற உள்ள இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி தலா மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் ஒரு நாள் போட்டி வரும் 15ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கிரிக்கெட் ரசிகர்கள், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்களை வாங்கிச் சென்றனர்.

Comment

Successfully posted