சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

Aug 15, 2018 08:06 AM 464

இந்தியாவின் 72-வது சுதந்திர தினம், நாடுமுழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில், இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடத்துள்ளது. இதனால், டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,  டெல்லி மற்றும் மும்பையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் துணை ராணுவப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சென்னையிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன், சென்னையில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Comment

Successfully posted