டிக்டாக் இளைஞரின் செயலால் முகம் சுளிக்கும் இணையவாசிகள்

Nov 11, 2019 08:23 AM 6514

டிக்டாக்கில் லைக் வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த இளைஞர் செய்த செயல் என்ன? 


டிக்டாக் வீடியோ தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டுவர ஒரு நல்ல தளமாக இருந்து வருகிறது. இதில் வீடியோ பதிவிட்டோர் சினிமாத் திரையிலும் வெற்றி நடை போட்டு வருகின்றனர்.அதே வேளையில் லைக்குகளுக்காக டிக்டாக்கில் மூழ்கிப்போக, அது வேறு வகையில் அவர்களுக்கு பிரச்னையாக அமைந்தது போகிறது.

டிக்டாக் வீடியோவில் நடிக்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் டிக்டாக்கால் குடும்பத்தில் விரிசல் விழுந்து அது கொலை வரை செல்லும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது.அந்த வகையில், தற்போது லைக்ஸ்களை வாங்க வேண்டும் என்பதற்காக கவனத்தை ஈர்க்க எப்படி வேண்டுமானாலும் வீடியோ எடுக்கலாம் என்ற நிலைக்கு சிலர் வந்துள்ளனர்.அப்படி ஒரு வீடியோ நெட்டிசன்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இளைஞர் ஒருவர் வீட்டு வாசலில் போலியாக ரத்த வாந்தி எடுத்து கீழே விழுந்து கிடக்க, அவரது குடும்பத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அதுவும், இளைஞரின் தாய் அதிர்ச்சியோடு ஓடி வருகிறார். பின்னர், சிரித்துக்கொண்டே இளைஞர் எழுந்திருக்க, அந்தப் பெண், கோபத்தின் உச்சிக்கே செல்கின்றார். இளைஞரை நன்றாக அடித்து உதைத்து தனது கோபத்தை காட்டுகிறார். இந்த நிகழ்வு இணையவாசிகளிடம் சிரிப்பை வரவைத்தாலும், பலர் தங்கள் கோபத்தையும் பதிவு செய்துள்ளனர்

டிக்டாக் போன்ற போன்ற செயலிகள் தனிதிறமையினை வெளியிட வந்தவை. அவையே வாழ்க்கை கிடையாது லைக்குகளுக்காக இதுபோன்று செய்வது முட்டாள் தனமானது என கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர் இணைய வாசிகள்...

Comment

Successfully posted