தமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

Jul 03, 2020 04:22 PM 455

தமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 21 ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் கால அவகாசத்தை, ஜூன் 30-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30 உடன் நிறைவடைந்த நிலையில், அவகாசத்தை, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டள்ளது.

Comment

Successfully posted