திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன

Jan 23, 2020 03:42 PM 469

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி  கோயிலில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 6 லட்சத்து 27 ஆயிரத்து 598 ருபாய் கிடைத்துள்ளது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜனவரி  மாதத்திற்கான உண்டியல் காணிக்கை, கோவிந்தம்மாள் ஆதித்தனார்  மண்டபத்தில் செயல் அலுவலர் அம்ரித் தலைமையில் எண்ணப்பட்டது. சிவகாசி பதினென் சித்தர் மடம் பீடம், குருகுல வேதபாடசாலை உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். இதில் ஜனவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கையாக  2 கோடியே 6 லட்சத்து 27 ஆயிரத்து 598 ரூபாய் மொத்தம் கிடைத்துள்ளது. அதில் நிரந்தர உண்டியலில் ஒரு கோடியே 89 லட்சத்து  72 ஆயிரத்து 127 ரூபாயும்,கோசாலை உண்டியலில் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 555 ரூபாயும், யானை பராமரிப்பு உண்டியலில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 532 ரூபாயும் கிடைத்துள்ளது. மேலும்  கோயில் அன்னதான உண்டியலில் 13 லட்சத்து பதினெட்டாயிரத்து 721 ரூபாயும், சிவன் கோயில் அன்னதான உண்டியலில்  9 ஆயிரத்து 663 ரூபாயும் ரொக்கமாக கிடைத்துள்ளது,மேலும் தங்கமாக 1,630 கிராமும்,வெள்ளியாக  27,523 கிராமும், வெளிநாட்டு கரன்சி தாள்கள் 161- ம் காணிக்கையாக கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted