திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.2.60 கோடி

May 30, 2019 09:23 AM 98

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக, 2 கோடியே 60 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில், மே மாதத்திற்கான உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி, கோவிந்தம்மாள் மண்டபத்தில் நடைபெற்றது. கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை முன்னிலையில், கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். இதில், பணமாக 2 கோடியே 60 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. 3 ஆயிரத்து 30 கிராம் தங்கம், 20 ஆயிரத்து 855 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளன.

Comment

Successfully posted