திருப்பதி, சபரிமலை கோயிலுக்கு இனி ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்

Oct 15, 2019 06:57 PM 190

திருப்பதியை போன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மண்டல பூஜைக்காக நவம்பர் மாதம் 15ஆம் தேதி திறக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளான நவம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. பின்னர் டிசம்பர் 30ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்படும். இந்தக் காலங்களில் சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருப்பதியை போன்று சபரிமலையிலும ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இந்தாண்டு மண்டலப் பூஜையின் போது அனைத்து பக்தர்களும் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக புதிதாக தொடங்கப்படவுள்ள இணையதள முகவரியில் பக்தர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted