திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ நிகழ்வு கோலாகலம்

Oct 02, 2019 08:19 AM 255

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று, உற்சவர் அன்ன வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம், செப்டம்பர் 1 ஆம் தேதி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் விழா முடிவைடைந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று காலை, ஐந்து தலைகள் கொண்ட நாகம் வடிவிலான சின்ன சேஷ வாகனத்தில் கிருஷ்ணர் அவதாரத்தில், உற்சவர் எழுந்தருளினார். மேலும் இரவில், முன்றாம் வாகனமான அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி ஏழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Comment

Successfully posted

Super User

super