”கள்ளக்காதலியுடன் வாழ-கர்ப்பிணி மனைவிக்கு தீ”-கைது செய்து சிறையிலடைப்பு

Jun 24, 2021 06:34 PM 858

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, கள்ளக்காதலியுடன் வாழ்வதற்காக, கர்ப்பிணி மனைவியை தீ வைத்து கொலை செய்ய முயன்ற கணவனை, போலீசார் கைது செய்தனர்.

image

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி, பெருமாநல்லூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த போது, ஆட்டோ ஓட்டுநர் கௌதம் உடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், லட்சுமி 3 மாத கர்ப்பம் அடைந்ததையடுத்து, இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், கர்ப்பத்தை கலைக்க கௌதம் வற்புறுத்தி உள்ளார். அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த கணவன், மனைவின் மீது டீசல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் உயிர் தப்பிய லட்சுமி, தனியார் காப்பகத்தில் தங்கி உள்ளார்.

image

இதனிடையே, தனது கணவன் வேறொரு வடமாநில பெண்ணை திருமணம் செய்துள்ளதை அறிந்த லட்சுமி அளித்த புகாரின் பேரில், கௌதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Comment

Successfully posted