திருவள்ளூர் தேர்வாய்கண்டிகையில் கட்டுக்கடங்கா கரும்புகைத்தீ - கூடுதல் காவல் வரவழைப்பு

Jun 18, 2021 11:58 AM 559

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிவரும் டயர் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு நிலைய வீரர்கள் கடுமையாக போராடினர்.

image

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் ரப்பர் தூள் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பழைய ரப்பர் டயர்களை, ரப்பர் பொடியாக்கி மீண்டும் புதிய டயர்களாக வடிவமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பரவியதால் அப்பகுதி கரும்புகையால் சூழ்ந்தது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், கொளுந்துவிட்டு எரிந்த தீயைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்

image

நல்வாய்ப்பாக தொழிலாளர்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை,மேலும் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Comment

Successfully posted