கார்த்திகை தீபத் திருவிழாயன்று கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை

Nov 16, 2018 09:24 PM 257

 

திருவண்ணாமலையில் மகாதீப திருவிழா அன்று கோயிலுக்குள் செல்போன்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் தீபத் திருவிழா இந்த ஆண்டு 22 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மகாதீப திருவிழாவின்போது கோயிலுக்குள் பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் சி.பி. சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலூரில் நடைபெற்ற காவலர்களுக்கான நிறைவாழ்வு பயிற்சி துவக்க விழாவில் கலந்து கொண்ட அவர், தீபத் திருவிழாவையொட்டி வரும் திருவண்ணாமலையில் 77 இடங்களில் வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மகா தீபத்தின் போது பாதுகாப்புப் பணியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுவார்கள் என்றும், பல்வேறு இடங்களில் 265 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Comment

Successfully posted