திருவாரூர் சென்றடைந்தது ஐயப்ப தர்ம பிரசார ரத யாத்திரை

Dec 13, 2019 03:31 PM 234

சென்னையில் துவங்கிய ஐயப்ப தர்ம பிரச்சார ரத யாத்திரை திருவாரூர் மாவட்டத்தை சென்றடைந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 11-ம் தேதி சென்னையில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், காஞ்சி சங்கராச்சாரியார் முன்னிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஐயப்ப தர்ம பிரச்சார ஏழு ரதங்களை துவக்கி வைத்தார். இந்த 7 ரதங்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, வருகிறது. ஒரு மாதத்தில் சுமார் 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சென்ற இந்த ரதத்தை சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்க இயலாதவர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். அந்த வகையில் இந்த ஐயப்ப தர்ம பிரச்சார ரத யாத்திரை திருவாரூர் மாவட்டத்தை வந்தடைந்தது. ரதத்தில் உள்ள ஐயப்பனை ஏராளமான பெண்களும், ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Comment

Successfully posted