டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு : மேலும் 2 பேர் கைது

Feb 09, 2020 06:47 AM 385

டி.என்.பி.எஸ்.சி.  தேர்வு முறைகேட்டில், மேலும் 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 பேர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.  இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன், திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த விமல்குமார் ஆகிய மேலும் இருவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை, குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் 19 பேரும், குரூப் 4 தேர்வு முறைகேட்டில் 16 பேரும் என மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted