விவசாயத்திற்கான நீரை வழங்க ரூ.1000 கோடி மதிப்பில் தடுப்பணை: முதலமைச்சர்

May 05, 2019 10:17 PM 270

இந்தியாவிலேயே சாலை வசதிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தேர்தல் முடிந்தவுடன் அனைத்து ஏழை, எளிய மக்கள் வங்கி கணக்குகளில் 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை ஒரு தலைவராக நினைத்துக் கொண்டு மக்களை திசை திருப்பிக் கொண்டிருப்பதாகவும், ஆனால், தான் இன்றும் தொண்டனாக தான் இருப்பதாக கூறிய முதலமைச்சர், மக்களின் திட்டங்களை நிறைவேற்றுவதே தமது லட்சியம் என்றும் தெரிவித்தார்.

நீர் மேலாண்மை திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறிய முதலமைச்சர், எங்கெல்லாம் உபரி நீர் வெளியேருகிறதோ அங்கே ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்பட்டு விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்க, அதிமுக அரசு பணிகளை தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted