இன்று 2-வது ஒருநாள் போட்டி : தொடரை வெல்லுமா இந்தியா?

Mar 26, 2021 08:38 AM 3711

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று புனே மைதானத்தில் நடைபெற்றவுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டி, டி-20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலையில் உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளை தவறவிட்ட இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடும் என்பதால், இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், ஒரு நாள் தொடரில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comment

Successfully posted