இன்றைய ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், பெங்களூரு அணியும் பலப்பரீட்சை

Apr 27, 2021 08:29 AM 4369

 ஐ.பி.எல். தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரு அணிகளும் தலா 4 வெற்றி பெற்று சம பலத்துடன் உள்ளனர்.

டெல்லி அணியிலிருந்து அஸ்வின் விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

image

சென்னை அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த பெங்களூரு அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்புடன் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும். இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. 

 

Comment

Successfully posted