சேலஞ்சின் உச்ச கட்டத்தில் இன்றைய பிக்பாஸ் வீடு..

Aug 23, 2019 04:24 PM 408

இன்று பிக்பாஸ் வீட்டின் 61வது நாள்.இந்த வாரம் முழுவதும் வீட்டின் தலைவராக ஷெரின் இருந்த நிலையில், அடுத்த வாரத்திற்கான தலைவரை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என பிக்பாஸ் கூறினார்.சேரன், லாஸ்லியா, சாண்டி ஆகியோரை போட்டியாளர்கள் தேர்வு செய்தனர்.

இன்றைய முதல் ப்ரோமோவில் முகெனும் கவினும் கைகளை பின்னாடி கட்டிக்கொண்டு வெறித்தனமாக விளையாடுகின்றனர்.அடுத்து தர்ஷனும், சாண்டியும் ஒரு தட்டு முழுவதும் வைக்கப்பட்டுள்ள லட்டுவினை போட்டிப்போட்டு கொண்டு சாப்பிடுகின்றனர்.சாப்பிட்டு முடித்தவுடன் இருவரும் சமமாக சாப்பிட்டு உள்ளனர் என சேரன் கூற, அதற்கு சாண்டியோ இன்னொரு தடவ சாப்பிட வச்சிறாத குருநாதா என கூறுகிறார்.

இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் லிவ்விங் ஏரியாவில் அமர்ந்துள்ளனர்.ஒரு பவுலில் லாஸ்லியா, சாண்டி, சேரன் ஆகிய மூன்று பேரின் பெயரும் எழுதிப் போடப்பட்டுள்ளது.போட்டியாளர்கள் அனைவரும் வந்து சீட்டினை எடுக்கிறார்கள்.யாரின் பெயர் அதிக முறை எடுக்கப்படுகிறதோ அவரே வீட்டின் தலைவர் என பிக்பாஸ் கூறியிருந்த நிலையில், 5 முறை சேரனின் பெயர் எடுக்கப்படுகிறது.அடுத்து வாரத்திற்கான தலைவராக சேரன் தான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த வாரம் அவர் நாமினேஷனில் வெளியே செல்லாமல் இருந்தால் மட்டுமே அவர் வீட்டின் அடுத்த வார தலைவராக தொடர முடியும்.

Comment

Successfully posted