வெளியூர் செல்லும் பயணிகளுக்காக இன்று 3,975 பேருந்துகள் இயக்கம்

Nov 05, 2018 10:26 AM 391

தீபாவளிப் பண்டிகையையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று 3,975 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக, சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 3 நாட்களில் 8,875 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் 1,700 சிறப்பு பேருந்துகள் உள்பட 3,975 பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளன. இதேபோல், இன்று சென்னையில் 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

 

Comment

Successfully posted