இன்று, பத்மநாபபுரம் அரண்மனையைக் காணக் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Oct 20, 2019 06:10 PM 193

வார விடுமுறை காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனைக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான, பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகத்தைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் சென்றனர். வார விடுமுறை என்பதால், வழக்கத்தைவிடச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. மன்னர் வாழ்ந்த இடம் மற்றும் அவர் பயன்படுத்திய பெருட்கள், மக்கள் குறை தீர்க்கும் அறை, அமைச்சர்கள் கூடும் இடங்கள், ஆகியவற்றைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் சென்றனர்.

Comment

Successfully posted