டெல்லியில் பாஜக மாநில தலைவர்கள் இன்று ஆலோசனை

Jun 13, 2019 06:54 AM 132

டெல்லியில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு, பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில், பாஜக மாநிலத் தலைவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்தக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநிலங்களின் பாஜக தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில், நடைபெற உள்ள மகாராஷ்டிரா, பீகார், அரியானா, ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted