கத்தி பேசுனா உங்களுக்கு தான் BP வரும்..வனிதாவுக்கும் -மீராவுக்கும் ஸ்டார்ட் ஆயிடுச்சு..

Jun 26, 2019 04:53 PM 868

பிக்பாஸ் வீட்டில் இன்று மூன்றாவது நாள்.நேற்று அனைவரும் கார்டன் ஏறியாவில் சந்தோஷமாக ஆடிகொண்டிருந்தனர்.அப்போது புது போட்டியாளர் மீரா மிதுன் என்ட்ரி கொடுத்தார்.அனைவரும் அவரை வரவேற்று வீட்டினுள் அழைத்துச்சென்றனர்.பின்பு அவருக்கு ஒரு டாஸ்க் கொடுத்து அவரை சக போட்டியாளராக ஏற்றுக்கொண்டனர்.ஆனால் நேற்று டாஸ்க் செய்யும் போதே அபிராமி, மீராவுக்கு சரியாக பதிலளிக்கவில்லை.

இன்றைய பிக்பாஸ் முதல் ப்ரோமோவில் மீரா, அபிராமியை நோக்கி என்கிட்ட attitude காமிக்காதிங்க என்று கூறுகிறார்.பின்பு வனிதாவும் மீராவும் மாறி மாறி கத்தி கொள்கின்றனர்.இதற்கிடையில் ஒன்றுமே தெரியாத குழந்தை போல் கவின் நின்றுக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

இரண்டாவது ப்ரோமோ மிகவும் உருக்கமானதாக இருக்கிறது.பாத்திமா பாபு ரேஷ்மாவிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.உங்கள் குடும்பத்தில் யாருடைய இழப்பு தாங்கமுடியாது என கேட்கிறார்.அதற்கு என்னுடைய குழந்தை என அழுதுக்கொண்டே ரேஷ்மா கூறுகிறார்.பின்பு அனைவரும் அவருக்கு ஆறுதல் வார்த்தை கூறுகின்றனர்.இன்றைய நாளும் பிக்பாஸ் வீட்டில் நிச்சயம் பஞ்சாயத்து இருக்கிறது.

Comment

Successfully posted