இன்று சரிவை சந்தித்து வரும் மும்பை பங்கு சந்தை

Aug 13, 2019 05:11 PM 145

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளின் குறியீடுகள் இன்று சரிவை சந்தித்து வருகின்றன. மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 222 புள்ளிகள் சரிந்து காலை நிலவரப்படி 37ஆயிரத்து 259 புள்ளிகளாக உள்ளது.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 91 புள்ளிகள் சரிந்து, 11 ஆயிரத்து 17 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக், 7 ஆயிரத்து 863 புள்ளிகளிலும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 210 புள்ளிகளாகவும் உள்ளது. பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC, 5 ஆயிரத்து 304 புள்ளிகளுடனும் ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 11 ஆயிரத்து 644 புள்ளிகளுடனும் வர்தகமாகி வருகிறது. ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI 20 ஆயிரத்து 455 புள்ளிகளுடனும் . ஹாங்காங் மற்றும் சீன பங்கு சந்தைகளில் வர்த்தகம் தொடங்கி உள்ள நிலையில், ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 25 ஆயிரத்து 281 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 797 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

Comment

Successfully posted