மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று

Dec 05, 2019 06:31 AM 516

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். அமைச்சர் பெருமக்களும், அதிமுக தொண்டர்களும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த இருக்கின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்த இருகின்றனர்.

Comment

Successfully posted