இன்று ஐஸ்வர்யா ராய்க்கு 45-வது பிறந்த நாள்!

Nov 01, 2018 11:23 AM 474

முன்னாள் உலக அழகியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தனது 45-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1973 ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி கர்நாடகாவின் மங்களூரில் பிறந்த ஐஸ்வர்யா ராய், 1994 ஆம் ஆண்டு இந்தியாவின் சார்பில் போட்டியிட்டு உலக அழகி பட்டம் வென்றார். இதன் மூலம் உலக அளவில் பிரபலமான அவர், பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

மணிரத்னத்தின் இருவர் படம் மூலம் தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், 2007ஆம் ஆண்டு இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்தார். இந்திய திரையுலகில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வரும் அவர் இன்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் குளோப் ஜாமூன் என்ற புதிய படத்தில் இணைந்து நடித்து வரும் அவருக்கு இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.Comment

Successfully posted