உலக இலக்கியத்தின் உளவியல் ஆய்வாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் நினைவு தினம் இன்று.

Feb 09, 2021 06:32 AM 5613

உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த உளவியலாளர்களில் ஒருவராகக் கருதப்படும், ரஷ்ய எழுத்தாளரும் அறிஞருமான பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் (Fyodor Dostoevsky), நினைவு தினம் இன்று.

1821ல் மாஸ்கோவில் பிறந்த தஸ்தயெவ்ஸ்கிக்கு இளமையிலேயே குழந்தைக் கதைகள், சாகசக்கதைகள் மூலமாக இலக்கியம் அறிமுகமானது. பின்னர் பல்வேறு உலக எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்கலானார். ரஷ்யாவில் 19 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த சிக்கலான அரசியல், சமூக, ஆன்மீகத் தளங்களில், மனித மனத்தின் ஆழங்களை மிக நுட்பமாக வெளிப்படுத்திய தஸ்தயெஸ்கியின் படைப்புகள், பல்வேறு வகையான தத்துவ ஆன்மீகப் பின்புலங்களில் முன்வைக்கப்படுகின்றன.

1840 களில் வெளியான அவரது முதல் நாவலான ‘புவர் ஃபோக்’, செயின்ட் பீடர்ஸ்பர்க் நகரின் இலக்கிய வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றது. அதேபோல் குற்றவாளியின் மன உலகை விரிவாக ஆய்வு செய்யும் வகையில், தஸ்தயெஸ்கி எழுதிய “குற்றமும் தண்டனையும்” நாவல். ரஷ்ய இலக்கியத்தில் ஒரு மைல் கல்லாக கொண்டாடப்படுகிறது. உலக இலக்கியத்துக்கு கிடைத்த கருத்து கருவூலமான இந்நூல், 26 உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சிறப்புக்குரியது.

இவருடைய மேலும் பல நூல்கள், 170க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘வெண்ணிற இரவுகள்’ என்ற தஸ்தயெஸ்கியின் கதை இயற்கை என்ற பெயரில் தமிழிழ் திரைப்படமாக வெளிவந்ததில் இருந்து, அவரது படைப்புகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை அறியலாம். ஒன்பது வயதேயான சிறுமி, மதுவுக்கு அடிமையான ஒருவனால் வன்கொடுமைக்கு உள்ளாகி, மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதை, தனது சிறுவயதில் காண நேரிட்ட சம்பவம், அவரை ஒரு கொடுங்கனவாக ஆட்கொண்டதால், அதனை அசுரர்கள், கரமசோவ் சகோதரர்கள் போன்ற படைப்புகளின் வழியே வெளிப்படுத்தினார்.

குறைந்தது ஒரு கட்டுரையிலாவது ரஷ்யாவின் அரசியலையும் மதத்தையும் விமர்சிக்கும் தஸ்தயெஸ்கி, அரசியல் பற்றி அல்லாமல் மனிதனின் ஆளுமை, அகங்காரம் என்பவை குறித்தும் தனது படைப்புகளில் பேசினார். தொடர்ந்து ரஷ்யப் பேரரசை விமர்சித்ததால் தஸ்தயெஸ்கியின் புத்தகங்கள் தடை செய்யப்பட்டன, அவரும் கைது செய்யப்பட்டார். ஆனாலும், அவர் சிறையில் இருந்தவாறே பல நூல்களை எழுதினார்.

‘உண்மையின் அழகு பொதிந்த ஓர் ஆன்மாவை சிருஷ்டிப்பதே என் நோக்கம்’எனக் குறிப்பிடும், தஸ்தாயெவ்ஸ்கி மறைந்து 200 ஆண்டுகள் ஆன பின்னரும் தனது படைப்புகளின் வழியே இவ்வுலகில் நீட்சியடைந்து புகழ் பெறுகிறார்!.

Comment

Successfully posted