இன்று பாகுபலி புகழ் பிரபாஸின் பிறந்தநாள்

Oct 23, 2018 12:14 PM 525

இந்தியாவின் அதிக வசூல் சாதனை படைத்த படம் பாகுபலி . இப்படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸின் அடுத்த படம் சாஹோ ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பிரபாஸிற்கு ஜோடியாக சாரதா கபூர் நடித்துள்ளார்.

முன்னணி பாலிவுட் நடிகர்களான ஜாக்கி ஷரப் , மந்திரா பேடி , ஆகியோர்களுடன் அருண் விஜய் முக்கிய கதாப்பாத்திரத்தில்  நடித்துள்ளார். ரன் ராஜா ரன் படத்தை இயக்கி புகழ் பெற்ற இளம் இயக்குநர் சுஷித்  ரெட்டி சாஹோ படத்தை இயக்கியுள்ளார்.

வரும் 2019 ஆம் ஆண்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் இன்று  பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு உருவான இப்படத்தின் விடியோவை வெளியிட்டுள்ளார்.

 30 நாள் அபுதாபியில் நடைபெற்ற சூட்டிங் காட்சியை வெளியிட்டுள்ள பிரபாஸ்,  ஹாலிவுட் படத்திற்கான இணையாண சண்டை காட்சிகள் ரசிகர்களை மிரளவைத்துள்ளது. தற்போது இது சமூக வளைதளங்களில் மிகவும் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.  

 

 

Comment

Successfully posted