இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இறுதிக் கட்ட பிரசாரம்!

Apr 01, 2021 07:15 AM 773

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான்கு நாட்கள் கொண்ட தனது இறுதிக் கட்ட பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.

ஏப்ரல் 4 ஆம் தேதி வரையிலான தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை முதலமைச்சர் இன்று தொடங்குகிறார். முதலில், நீலகிரி மாவட்டம் கூடலூரில் அதிமுக வேட்பாளர் பொன் ஜெயசீலனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். அதை தொடர்ந்து குன்னூரில் நடைபெறும் பிரசாரத்தில், குன்னூர் தொகுதி வேட்பாளர் கப்பச்சி வினோத், உதகமண்டலம் பாஜக வேட்பாளர் போஜராஜன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர், கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரசாரத்தில், கோவை மாவட்ட அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இதை தொடர்ந்து, பெருந்துறையில், ஈரோடு மாவட்ட அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இறுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், அந்த மாவட்ட அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
Comment

Successfully posted