சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

Mar 19, 2021 09:25 AM 5041

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

இதனால், தமிழ்நாட்டில் தற்போது, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது.

அதிமுகவினர் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், மிகுந்த ஆர்வத்துடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, நாளை நடைபெறுகிறது.

வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்ப பெற 22ம் தேதி கடைசி நாளாகும்.

இதனையடுத்து, அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted