இன்று நடைபெறுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

Jun 12, 2019 06:19 AM 457

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று தலைமைக்கழகத்தில் நடைபெறுகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று சென்னை ராயப்பேடையில் உள்ள தலைமைக்கழகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கழக செய்தி தொடர்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Comment

Successfully posted