இன்று ஒரே நாளில் 11 திரைப்படங்கள் வெளியீடு

Aug 03, 2018 03:37 PM 837

வார விடுமுறையை ஒட்டி, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால், தமிழ் சினிமா வரலாற்றில், நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் இன்று 11 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஆர்யா நடிப்பில் கஜினிகாந்த், தம்பி ராமையா இயக்கி நடித்திருக்கும் மணியார் குடும்பம், கிஷோர் நடிப்பில் உருவாகியிருக்கும் கடிகார மனிதர்கள் உள்ளிட்ட படங்கள் மட்டுமே, மக்களுக்கு பரிட்சியமான நடிகர்கள் நடித்துள்ள படங்களாக வெளிவந்துள்ளன. நாடோடி கனவு, அரளி, உப்பு புலி காரம், காட்டு பயன் சார் இந்த காளி, எங்க காட்டுல மழை, ஓ காதலனே, அழகு மகன், கடல் குதிரை உள்ளிட்ட புது முக நடிகர்களின் படங்களும் இன்ற ஒரே நாளில் வெளியாகி உள்ளன. 11 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி உள்ளது, தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted