ரேசன் பொருட்களை பெறுவதற்கான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம்!

Aug 01, 2020 12:03 PM 757

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான ரேசன் பொருட்களை பெறுவதற்கான டோக்கன் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இம்மாதத்திற்கான ரேஷன் பொருட்களை பெற டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. டோக்கன் விநியோகிக்கும் பணிகளில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, டோக்கனில் குறிப்பிடப்படாத நேரத்தில் பொருட்கள் வழங்கப்படாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி வெள்ளிக்கிழமையன்று ரேசன் கடைகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted