டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு

Mar 25, 2020 08:59 AM 2382

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா, இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்தது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா பாதிப்பால், ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்குமாறு பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், வரும் ஜுலை மாதம் 24ம் தேதி தொடங்கிவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஜப்பான் ஒலிம்பிக் சங்க ஒருங்கிணைப்புக்குழு ஆகியவை நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாராலிம்பிக் போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted