உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நாளை முக்கிய ஆலோசனை கூட்டம்

Nov 27, 2019 11:58 AM 344

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை அடுத்த மாதத்திற்குள் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும்நிலையில், ஆலோசனை கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

நாளை காலை 11.30 மணிக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted