உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்

Dec 15, 2019 10:35 AM 220

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளது. வரும் 27 மற்றும் 30-ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு ஏராளமானோர் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.

இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை மறுநாள் நடைபெறும் என்றும், 19-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Comment

Successfully posted