நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

Nov 24, 2018 11:04 AM 343

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீதும், துணை போகும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில் சிறப்பு குறை தீர்க்கும் முகாமை ஆட்சியர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். அப்போது, 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களது குறைகளை ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் மகேஸ்வரி, அரசு நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என
அவர் தெரிவித்தார்.

 

Comment

Successfully posted