திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Nov 29, 2019 01:39 PM 290

கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திருமூர்த்தி மலை பஞ்ச லிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை பஞ்ச லிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லிமுத்தான் பாறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில், பஞ்ச லிங்க அருவியில் தடுப்புகளை தாண்டி அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்த பகுதிகளில் தொடர்ந்து கன மழைப் பெய்து வருவதால் வனத்துறையினர் உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Comment

Successfully posted