சாலை தடுப்பு வேலியில் சுற்றுலா பேருந்து மோதல்; 14 பேர் படுகாயம்

May 16, 2019 01:00 PM 42

கோவில்பட்டியில் சுற்றுலா சென்ற தனியார் பேருந்து சாலை தடுப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் வாணியம்படியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் தனியார் பேருந்து மூலமாக சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டு இருந்தபோது தீடீரென நிலைதடுமாறி சாலையில் நடுவே இருந்த தடுப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு பெண் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்ததுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related items

Comment

Successfully posted