தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டது

Mar 22, 2020 03:58 PM 923

தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலாத் தலமான உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில், கல்லணை ,அரண்மனை, பரிகார ஸ்தலங்கள் போன்ற சுற்றுலாத் தளங்கள் உள்ள தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிவது வழக்கம்.

ஆனால் இன்று காலை 7 மணிமுதல் பொது மக்கள் வெளியில் வராமல் இருந்ததால், தஞ்சை பெரிய கோவில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ,நீதிமன்ற சாலை உள்ளிட்ட முக்கிய பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Comment

Successfully posted