கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Apr 05, 2021 10:32 AM 463

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஈஸ்டர் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தை தொட்டிருப்பதையடுத்து, கடந்த சில நாட்காளாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். நட்சத்திர ஏரி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், குடும்பத்துடன் புகைப்படம் எழுந்து மகிழ்ந்தனர்.

Comment

Successfully posted